கடல் மாசுபடுவதை தடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு சிறார்கள் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு நீந்திச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் 11 மணி 30 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ளனர்.
சென்னை ஓ.எம்.ஆர்.காரப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ (வயது 44), இவரது மகள் தாரகை ஆராதனா (வயது 09), தமிழக கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் மகன் நிஷ்விக் (வயது 07) ஆகிய மூவரும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிவரையான பாக். ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கைத் தூதரகம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சிடம் அனுமதி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் இராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு, ஒரு நாட்டுப் படகில் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமன்னாருக்கு வந்தனர். இந்நிலையில் தலைமன்னாரிலிருந்து புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீந்தத் தொடங்கி, அன்றையதினம் பிற்பகல் 3.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையை அடைந்தனர்.
இவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர், தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது