பொதுக் காப்புறுதித்துறையைச் சேர்ந்த விற்பனை நிபுணர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் உலகின் முதலாவது பிரத்தியேகமான கௌரவிப்புத்திட்டமான General Insurance Pinnacle Achiever (GIPA) விருதை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) அறிமுகம் செய்துள்ளது. பொதுக் காப்புறுதி விற்பனைத்திறனை கௌரவிக்கும் வகையில் இந்தத்திட்டம் அமைந்துள்ளதுடன், விற்பனைச் சிறப்பில் சர்வதேச நியமங்களை ஏற்படுத்துவதற்கு வழிகோலுவதாகவும் அமைந்துள்ளது.
60 வருடகால உறுதியான சந்தைப் பிரசன்னத்தைக் கொண்டாடும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடெட், தொழிற்துறையில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்யவேண்டிய தேவையை இனங் கண்டிருந்தது. அத்துடன், பொதுக்காப்புறுதி விற்பனை நிபுணர்களின் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடும் சர்வதேச, சுயாதீன கட்டமைப்பு ஒன்று காணப்படாமை, அவர்களின் அபிவிருத்தியை ஊக்குவிக்காமை மற்றும் தொழிற்துறை மட்டத்தில் பொதுக்காப்புறுதி விற்பனை நியமங்களை நிறுவுவதில் காணப்படும் இடைவெளியையும் இனங்கண்டிருந்தது.
ஆயுள்காப்புறுதித்துறை மில்லியன் டொலர்வட்ட மேசை (MDRT) மற்றும் ஆயுள்காப்புறுதி சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு சம்மேளனத்தினால் (LIMRA) அங்கிகரிக்கப்பட்ட பயிற்சித்திட்டங்கள் போன்றவற்றை கொண்டிருந்த போதிலும், பொதுக் காப்புறுதித்துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அவற்றுக்கு நிகரான எவ்விதமான திட்டங்களும் இல்லை.