NDB வங்கியானது, இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலுமான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை பட்டயதொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தினது (CPM Sri Lanka) தொழில்சார் பெண்கள் பிரிவின் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்குதாரராக இணைந்துள்ளது.
மார்ச் 19 அன்று, சர்வதேசமகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கை பட்டயதொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தின்(CPM Sri Lanka) தொழில்சார் பெண்கள் பிரிவானது கொழும்பு BMICHஇல் ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. ஐ.நா பெண்களின் உலகளாவிய துவக்கத்துடன் இணைந்ததாக, பெண்களின் குரல்களை உயர்த்துவதையும், பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட “பெண்களுக்காக முதலிடுங்கள்; முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” எனும் கருப்பொருளில் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் Zmessengerஇன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான ஜயோமிலோ குலியனாவின் பிரதான உரையும், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) பணிப்பாளரும் ஜோர்ஜியா தூதரகத்தின் கௌரவத்துக்குரிய தூதுவர் நாயகமுமான டியான் கோம்ஸ், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் பேராசிரியர் யமுனா சிறிவர்தன, NDB சட்டப் பிரிவின் உபதலைவர் மெலடி விக்கிரமநாயக்க, போன்ற நபர்களின் வழிகாட்டலிலான அறிவார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் CPM ஸ்ரீலங்காவின் தொழில்சார் மகளிர் பிரிவின் பிரதித் தலைவர் ருவைஹா ரசிக் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.