நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்களுக்கான விற்பனையாளரான Singer Srilanka, SLIM, KANTAR PEOPLES AWARD 2024 இல் தொடர்ந்தும் 18ஆவது முறையாக ‘ஆண்டின் சிறந்த மக்கள் வர்த்தகநாமம்’ விருதைவென்று, தனது வெற்றிப் பயணத்தை விரிவுபடுத்துகிறது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால்நடத்தப்பட்ட விழாவில், Durable Brand oF The Year விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது நுகர்வோர் பொருட்கள் துறையில் சிங்கரின் மேலாதிக்கத்தையும் இலங்கை முழுவதும் அதன் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Singer Sri Lanka பி.எல்.சி.யின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜான் மேஷ் ஆண்டனி, இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவிக்கையில்,“தொடர்ச்சியாக 18ஆவது ஆண்டாக SLIM Kantar People’s Brand of the year விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் Singer Sri Lanka வின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும். ஆண்டுதோறும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த விருது சிங்கர் இலங்கைக்கு மட்டுமல்ல, எங்கள் பயணத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் உரியது.