நாட்டின் மாபெரும் வைத்திய முற்பதிவு வலையமைப்பும் SLT-MOBITEL இன் துணை நிறுவனமுமான eChannelling PLC, அண்மையில் இலங்கை பட்டய நிபுணத்துவ முகாமையாளர்கள் (CPM) நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சிறந்த முகாமைத்துவ செயற்பாடுகள் நிறுவன விருதுகள் 2024” இல் மெரிட் விருதை தனதாக்கியிருந்தது. சுகாதார பராமரிப்புத் துறையில் சிறந்த செயற்பாடுகள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் eChannelling இன் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த மெரிட் விருது அமைந்திருந்தது.
இலங்கையின் பரிபூரண சுகாதார பராமரிப்பு தீர்வுகள் வழங்குநராகத் திகழும் eChannelling PLC க்கு வழங்கப்பட்ட கௌரவிப்பினூடாக, நவீன தீர்வுகள் மற்றும் சிறந்த முகாமைத்துவ செயன்முறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நிறுவனம் ஏற்படுத்தியிருந்த குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை கொண்டாடும் வகையில் வருடாந்தம் CPM விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு முழுவதிலும் நிறுவனங்களினால் பின்பற்றப்பட்டிருந்த சிறந்த முகாமைத்துவ செயன்முறைகளை மற்றும் அவற்றின் சிறந்த தலைமைத்துவம், மூலோபாயக் கொள்கைகள், மக்கள் முகாமைத்துவ செயன்முறைகள், இணைந்த பங்காண்மைகள், வினைத்திறனான வளங்கள் பயன்பாடு, ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறைகள் மற்றும் சிறந்த செயற்பாடுகள் போன்றவற்றை இந்த விருதுகள் கௌரவித்தது.