டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் தனது 56ஆவது கிளயைத் திறந்துவைத்துள்ளது. 519,காலி வீதி பாணந்துறை என்ற முவரியில் இது அமைந்துள்ளது.
நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட மூலோபாயத்துக்கான விஸ்தரிப்பின் ஓர் அங்கமே இந்தப் புதிய கிளையாகும். பல்வேறு தொழில் முனைவோர் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட வணிக கேந்திர முக்கியமான இடத்தில் நிறுவனத்தின் புதிய கிளை அமைந்திருப்பது மூலோபாய ரீதியில் முக்கியம் வாய்ந்ததாகும். பாணந்துறையில் உள்ள மக்கள் தனிப் பயனாக்கப்பட்ட, நெகிழ்வான,நெறிமுறையான மற்றும் துறைசார் சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்ற அசட்லைன் பைனான்ஸிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கான அணுகலைக் கொண்டுள்ளனர். இந்தப் புதிய கிளையானது வாகனங்களுக்கான லீசிங், வாகனக் கடன்கள், செயற்பாட்டு மூலதனக் கடன்கள், நிலையான வைப்பு உள்ளிட்ட பல்வேறு நிதித் தீர்வுகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.
இலங்கையின் முறைசாரா துறையின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களை வலுவூட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள லியதிரிய கடன்களையும் இந்தக் கிளை பெருமையோடு வங்கும்.
இந்த புதுமையான தயாரிப்பு அவர்களுக்கு மேம்பட்ட ரீதியில் இயங்குவதற்கான தீர்வுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டிருப்பதுடன், அவர்களின் சுதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் மேலதிக வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை எளிதாக்குகிறது அல்லது உள்நாட்டில் இயக்கப்படும், சிறிய அளவிலான வணிகங்களை விரிவுபடுத்துகிறது.