நோன்பு பதினேழு
நினைத்தால் நெஞ்சம்
உருகுது
முன்னூற்றுப் பதின்மூன்று
ஏழை ஸஹாபாக்கள்
இறங்கினர்
பத்ரில்——
ஆயிரம் பேர்
அதிகரித்த படையினர்
யுத்த தளபாடம்
மோதினர்
முஸ்லிம்களுடன்
சொற்ப நேரத்தில்
திகைத்தனர். எதிரிகள்——–
வல்ல அல்லாஹ் உதவிய.
வானவர் படை
கண்களுக்குள்
மண்ணைத்தூவி
உதவியும் நல்கினரே
தீனுக்காய் பட்டதுயர்
இறைவனும். ஏற்றுக்
கொண்டான்
ஆபத்து நேரத்தில்
உதவியும்
நல்கினான்—–
எதிரிப்படைநின்ற
தளபதிகள்
கழுத்தற்ற முண்டங்களாய்
தொலைந்து போயினர்
சக்தியுள்ள வல்ல அல்லாஹ்
சதிகளை முறித்து விட்டான்——-
கலிபா சொன்னதற்காய்
காலமெல்லாம் அழுகிறோம்
இறை நெருக்கம்
கிடைக்க
ஈமானை அமலைக்காப்போம்
புனித ரமழான்
பூக்கட்டும். இதற்காய்——–