கடலுக்கும் இரு முகங்கள்;
பெண்ணுக்கும் இருமுகங்கள்- அதில்
அமைதியே அழகு.
கடலின் ஆழமும்
அறிந்தவர்கள் இல்லை;
பெண்ணின் மன ஆழமும்
அறிந்தவர்கள் இல்லை பாரினிலே.
கடலில் உள்ள அற்புதங்கள் விசித்திரமே;
பெண் என்ற உயிரும்
விசித்திரமான அற்புதமே.
கடலும் தன்னுள்ளே பல
உயிர்களை சுமக்கின்றது ;
பெண்ணும் தனக்குள்ளே
உயிரை சுமக்கின்றாள்.
கடல் அலையின் ஓசையில்
உள்ளம் சாந்தமடைகிறது;
பெண்ணின் பேச்சில்
மனது அமைதியடைகின்றது.
கடலை பார்த்தாலே
இனம் புரியாத ஆனந்தம் ஆர்ப்பரிக்கும்
தொலைந்துவிடத் தோன்றும்;
பெண்ணை பார்க்கும் போதும்
இனம் புரியாத பேரின்பம்
கடலின் அமைதி ஒரு சமிஞ்சை ;
பெண்ணின் அமைதியும்
ஒரு சமிக்ைஞ (கொந்தளிப்பு)._
கடல் அலை நுரையாவது போல ;
அவளின் ஆசைகளும்
நுரையாகிவிடுகின்றன
இயற்கையின் தாயின் மீது
காதல் அதிசய காதல்;
இறைவன் படைத்த
அதியசம் பெண் மீது அழியாக் காதல்.
கடற்கரை மணலில் எழுதுவதை
அலை மறைப்பது போல
பெண் தனக்கு தோன்றிய
காதலை மறைக்கின்றாள்.
இறைவனின் படைப்பில்
இரண்டும் புதிரே…