144
கோழி இறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 04 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு விடப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.