Home » சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உயிர்ப்பு நாளில் உறுதி பூணுவோம்

சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உயிர்ப்பு நாளில் உறுதி பூணுவோம்

by Damith Pushpika
March 31, 2024 9:00 am 0 comment

“இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம். இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா நாளில் உறுதிபூணுவோமாக” என, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தைரியத்துடன் நன்னோக்கங்களை அடைவதற்காக மனிதனை பாவத்திலிருந்து விடுவித்து சமூக நீதி, அன்பு, கருணை மற்றும் மனித நேயத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் வாழ்வு சிறந்த முன்னுதாரணமாகும்.

எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையின் போதும், அதற்கு தேவையான மனநிலையை எம்மிடம் உருவாக்க சமய போதனைகள் எமக்கு பெரிதும் உதவுகின்றன.

இது அன்பையும் கருணையையும் பரப்பிய இயேசுவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் கிடைத்த உயர் விழுமியங்களை மீண்டும் மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டிய காலம்.

அவற்றின் மூலம் வளம் பெற்று எமது உள்ளங்களை புதியதோர் மாற்றத்தை நோக்கி வழிநடத்தி, அன்புணர்வுடன் இந்த உயிர்ப்பு பெருவிழாவை அலங்கரிப்போம்” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division