முன்னாள் போராளிகளின் நலன் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ‘அம்மான் படையணி’ அமைப்பின் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘அம்மான் படையணி’ எனும் புதிய அமைப்பினூடாக முன்னாள் போராளிகளின் நலன் பேணுவதாகவும் இதற்கு புலம்பெயர் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் உரிய வாழ்வாதார வசதியின்றி இரப்பதாகவும் அவர்களுக்காக புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கருனா அம்மான் தெரிவித்துள்ளார்