178
முழு சூரிய கிரகணம் எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி தோன்றுமென்பதுடன், சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியுமெனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது, முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகவே முழு சூரிய கிரகணம் தோன்றும்.
இந்நிலையில் வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044ஆம் ஆண்டிலேயே கிடைக்குமெனவும், நாசா மேலும் தெரிவித்துள்ளது.