NDB வங்கியானது, வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிநாட்டுப் பணம் அனுப்பலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, “சல்லி ரட்டின் – தேகி அபென் – பணம் அனுப்பல் புத்தாண்டு” என்ற அதன் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. மார்ச் 5 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் இந்த பிரசாரம், வெஸ்டர்ன் யூனியன் பரிவர்த்தனைகளில் பணத்தினை பெறுவதற்காக அல்லது செலுத்துவதற்காக NDB வங்கியைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கத் தீர்மானித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், இந்த ஊக்குவிப்பு காலத்தின் முடிவில் குலுக்கல் சீட்டிழுப்பின் மூலம் தகுதியான பங்கேற்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான வெகுமதிகளை NDB வழங்குகிறது.
அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் 100,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 25,000 ரூபாய் எனும் தாராளமான பணப்பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும், 20 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய் மதிப்புள்ள Cargills பரிசு வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பையும் பெறவுள்ளனர்.
வெஸ்டர்ன் யூனியனுடனான NDB செயலி அல்லது எளிய தொலைபேசி அழைப்பு மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பெறுவதற்கான இணையற்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறது. வெஸ்டர்ன் யூனியனின் விரிவான உலகளாவிய வலையமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பணம் அனுப்பலை எளிதாக அணுக NDB உதவுகிறது.