Home » சர்வதேச மகளிர் தினத்தை பெருமையுடன் கொண்டாடிய HNB FINANCE

சர்வதேச மகளிர் தினத்தை பெருமையுடன் கொண்டாடிய HNB FINANCE

by Damith Pushpika
March 31, 2024 6:41 am 0 comment

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை தனது சக பெண் பணியாளர்களை மதித்து பாராட்டும் வகையிலான ஒரு நிகழ்வாக “பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்து முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” (Invest in Women. Accelerate Progress) என்ற தொனிப்பொருளில் HNB ஏற்பாடு செய்தது.

இந் நிகழ்வானது நிறுவனத்தின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய கிளைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இவ் நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் வகையில், இலங்கை மற்றும் லெபனானில் உள்ள தொலைக்காட்சி தொகுப்பாளினியும், முன்னணி பேஷன் மொடலும், சர்வதேச அழகுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதிபடுத்தியவருமான திருமதி ஸ்டெபானி சிறிவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி ஸ்டெபானி சிறிவர்தனவின், வாடிக்கையாளர்களை கையாளும் ஆளுமை, பொதுத் தொடர்புகளைப் பேணுதல் தொடர்பான கருத்துரை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், இவ்வமர்வு 5 முக்கிய விடயங்களான நல்ல மன ஆரோக்கியம், தன்னம்பிக்கையை வளர்ப்பது, நேர்மறை மற்றும் உணர்திறன் நுண்ணறிவு, தகவல் தொடர்பு திறன் அதன் நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் நடத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division