டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனத்தினால் பஜாஜ் வாடிக்கையாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட புத்தம் புதிய பரிசுப் போட்டியான பஜாஜ் ஜெனுவின் புதையல் – அகழ்வதற்கு அல்ல சுரண்டுவதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
DPMC உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் டீலர்களிடம் பஜாஜ் ஜெனுவின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஜெனுவின் உதிரிப்பாகங்களில் காணப்படும் யானைக் குட்டி சின்னம் பொறிக்கப்பட்ட ஹொலோகிராம் ஸ்டிக்கரைச் சுரண்டி அதில் காணப்படும் இலக்கத்தை 0777665577 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக அனுப்புவதன் ஊடாக இந்தப் போட்டியில் இணைவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
பஜாஜ் ஜெனுவின் புதையல் போட்டியின் பாரிய சீட்டிழுப்பின் முதலாவது பரிசாக புத்தம் புதிய பஜாஜ் டிஸ்கவர் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக 55 அங்குல சென்யோய் தொலைக்காட்சியும், மூன்றாவது பரிசாக 50,000 ரூபா ரொக்கம் பணம் வீதம் 05வருக்கு வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக அட்லஸ், DPMC MRF மற்றும் ஒராயன் டயர் கொள்வனவு செய்வதற்கான 25,000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் மற்றும் பேர்பே இற்கான குடும்பப் பொதியும் 15 பேருக்கு வழங்கப்படும். மேலும் வாராந்தம் தெரிவுசெய்யப்படும் வெற்றியாளர்களில் 20 பேருக்கு பஜாஜ் ஜெனுவின் உதிரிப்பாகங்கள் கொள்வனவு செய்வதற்காக 10,000 ரூபா வவுச்சர்கள் வழங்கப்படும்.