UK இன் கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாசார உறவுகளுக்கான சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில், UK பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, STEM திட்டத்தில் பெண்களுக்கான புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மதிப்புமிக்க புலமைப்பரிசில் பெண் STEM பட்டதாரிகள் இங்கிலாந்தில் தங்கள் முதுநிலைப் படிப்பைத் தொடர வடிவமைக்கப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், பலவிதமான முன்னோக்குகளை உறுதி செய்வதற்கும், புதுமைகளை இயக்குவதற்கும் STEM துறைகளில் பெண்களின் இருப்பு அவசியமாகும். அவர்களின் இருப்பு பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட திறன்களைக் கொண்டு தொழிலாளர்களை வளப்படுத்துகிறது, இறுதியில் சமூகத்தின் நலனுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அது மேம்படுத்துகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி, இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து 146 நாடுகளுக்கும் 2023ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி மதிப்பெண் 68.4% ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு பதிப்பை விட 0.3% முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
25 புலமைப்பரிசில்கள் இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண் STEM புலமையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஐந்து UK உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். –