T Brand Shirt களை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதியன்று பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
மிகக்குறைந்த விலையில் மிக உயர்ந்த தரம், நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் அதிக கவர்ச்சியுடன் கூடிய சட்டை களை வாடிக்கையாளரின் கைகளில் சேர்க்கும் நோக்கத்துடன் இவை தயாரிக்கப்படுகின்றன, மற்றும் டி பிராண்ட் சட்டை யானது “எப்போதும் இல்லாத வகையில் மிகவும் மலிவான பிராண்டட் சட்டை”. அல்லது “எப்போதும் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட உயர்தரமான சட்டைகள்”, என்றும் அழைக்கப்படும். மிகக் குறைந்த விலையில் உயர்தர சட்டைகளை நுகர்வோருக்கு வழங்குவதே தமது நோக்கமாகும் என முகாமை த்துவப் பணிப்பாளர் Tiroshan Upendra தெரிவித்தார். மேலும், ஐரோப்பிய தரங்களின் படி தயாரிக்கப்படும் துணி மட்டுமே நிபந்தனை சரிபார்ப்புக்குப் பிறகு இந்த டி பிராண்ட் சட்டையின் உற்பத்தி செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் என்றும், அடுத்த மாதத்திற்குள் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் குறைந்த விலையில் டி பிராண்டட் சட்டைகளை வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
செயற்பாடு முகாமையாளர் Chathushika Lakmini கருத்து தெரிவிக்கையில், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு T-பிராண்டட் சட்டையிலிருந்தும் பத்து ரூபாயானது தொலை தூர பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுகிறது என அவர் அவர் மேலும் தெரிவித்தார்.
T Brand Shirt 11