உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள தகவல்கள் உண்மையெனின் குற்றச்செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த குற்றத்துக்காக அவர் உடன் கைது செய்யப்பட வேண்டுமென, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்,
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள தகவல்களால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் அரசியல் இறையாண்மைக்கு மாபெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் உண்மையெனில், அவரிடம் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய சூத்திரதாரிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.