ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமையாகும். 1977ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய ரணில் விக்கிரமசிங்க, அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தி வருவதுடன், இந்நாட்டில் 06 தடவைகள் பிரதமராக பதவி வகித்த பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த அரகலய போராட்டத்தின் பின்னர் நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பேற்க சகல கட்சித் தலைவர்களும் பின்னின்ற போது, பாரிய சவால்களுக்கு மத்தியில் எந்தவித தயக்கமுமின்றி நாட்டை பொறுப்பேற்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர் அயராது செயற்பட்டு வருகின்றார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை தொடர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கல்வி கற்ற முதலாவது ஜனாதிபதியெனவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.