Home » உலக பாரம்பரிய சின்னமாக விரைவில் மாற்றப்படவுள்ள ‘நாமல் உயன’

உலக பாரம்பரிய சின்னமாக விரைவில் மாற்றப்படவுள்ள ‘நாமல் உயன’

by Damith Pushpika
March 24, 2024 6:32 am 0 comment

தேசிய நாமல் உயன மற்றும் இளஞ்சிவப்பு பளிங்கு பாறைப் படுகை தொல்லியல் மற்றும் சூழலியல், புவியியல் ரீதியாக தனித்துவம் வாய்ந்த சூழல் தொகுதி என்பதால், அதனை உலக மரபுரிமையாக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டுடன் மத்திய கலாசார நிதியத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற அவைத் தலைவரின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜயவர்த்தன தெரிவித்தார்.

தேசிய நாமல் உயனவின் 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நாமல் உயனவில் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

20 வருடங்களுக்கு முன்னர் எமது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன், இந்த நாட்டின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் தலையிடாதிருந்தால் இன்று இந்த நாமல் உயன வெறும் கனவாகவே இருந்திருக்கும். அத்துடன் நான் அரச அதிகாரியாக, அன்று முதல் இன்று வரை இருந்த அனைத்து அரச தலைவர்களிடமிருந்தும் தேவையான அரச அனுசரணை இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்காக வனவாசி ராகுல தேரருக்கு குறைவில்லாமல் கிடைத்தது என்பதை குறிப்பிடாவிட்டால் அது அவர்களுக்கு நான் இழைக்கும் அகௌரவமாகும்.

அத்துடன் ஊடகங்கள் அன்று தொடக்கம் இன்று வரை மிகவும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளன. விசேடமாக எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்மன் ரணசிங்க மற்றும் சிறி ரணசிங்க உள்ளிட்ட பலர் அதன் பிரதான பங்குதாரர்கள் ஆவார்கள். இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் நாமல் உயனவின் மனம் கவரும் அழகை உலகத்திற்கு கொண்டு சென்றன.

உண்மையில் எமது வனவாசி ராகுல தேரருக்கு எவ்வளவு தான் தேவை இருந்தாலும் அரசாங்கத்தின் அக்கறை இருந்தாலும் ஊடகங்கள் சமூகத்தின் எண்ணங்களை கட்டுப்படுத்தும் உலகில் சமூக ஊடகங்கள், வெகுஜன ஊடகங்கள், சூழலியலாளர்கள், குடிமக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் தேசிய நாமல் உயனவை பாதுகாத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியாதிருந்திருக்கும்.

இந்த விஷேட தருணத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். எமது வனவாசி ராகுல தேரர் உட்பட நாம் அனைவரும் நாமல் உயனவின் தற்காலிக பராமரிப்பாளர்கள் மட்டுமே. நம் முன் அமர்ந்திருக்கும் இந்த அழகான குழந்தைகள் உட்பட நாட்டின் அடுத்த தலைமுறை குழந்தைகளே நாமல் உயனவின் உண்மையான உரிமையாளர்கள். உயர்கல்வி ஒன்றே தனது வாழ்வை வெற்றியடையச் செய்யும் என்பதை உணர்ந்து, எதிர்காலக் கல்விக்குத் தேவையான பல பொருட்களைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில், நாமல் உயனையைச் சுற்றி வாழும் இந்த ஆயிரம் குழந்தைகளைப் போல, நம் நாட்டுப் பிள்ளைகள் அனைவரும் பாடசாலை பாடத்திட்டத்தின் மூலம் நாமல் உயனவை ஏன் நேசிக்க வேண்டும் என்பதை கற்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல. உங்களுக்கு இன்னொரு நற்செய்தி உள்ளது. எதிர்காலத்தில் எமது வனவாசி ராகுல தேரர் அந்த பெறுமதிமிக்க தேசிய வளத்தை உலக பாரம்பரியமாக மாற்றுவதற்கு கடுமையாக உழைத்து வருகின்றார்.

அவருடன் மத்திய கலாசார நிலையமும் இணைந்திருக்கின்றது. இச் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம். எதிர்காலத்தில் ஒரு நாள் நாமல் உயன உலக பாரம்பரிய சின்னமாக மாற்றப்படும். கிராம மக்களே உண்மையான பயனாளிகள்! அன்றும் இன்றும் சுற்றாடலைப் பொறுத்தமட்டில் நாமல் உயனயை பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அன்று நாக மரக் காடாக இருந்த இந்த இடத்தை இன்று சகல வசதிகளுடன் யாவரும் அறியும் வகையில் மாற்றிய பெருமை எமது வனவாசி ராகுல தேரருக்கே உரியது. வனவாசி ராகுல தேரர் போன்றவர்கள் அபூர்வமாகவே இப் பூமியில் பிறக்கிறார்கள்.

தான் வாழும் கிராமம், இயற்கை மற்றும் மக்களை நிபந்தனையின்றி – எதையும் ஈடாகப் பெறாமல் நேசிக்கும் இத்தகைய வீர பௌத்த புதல்வர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அவசியம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

தமிழில் வீ.ஆர்.வயலட்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division