புத்தாண்டு பருவகாலம் 2024க்கான உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக ஹவலொக் சிட்டி மொலுடன் தனது ஒத்துழைப்பை அறிவிப்பதில் NDB வங்கி மகிழ்ச்சியடைகிறது. மார்ச் 14, 2024 முதல் ஏப்ரல் 21, 2024 வரை, NDB பிரத்தியேக அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மோலில் சலுகைகளை பெற்று பண்டிகை உற்சாகத்தில் மகிழலாம்.
இந்தச் சிறப்புப் பண்டிகை பருவத்தில், NDB வழங்கும் “அவுருதுவாசி வாஹே” அட்டை சலுகைகளுடன், அட்டைதாரர்கள் ஹவலொக் சிட்டி மோலில் உள்ள பல்வேறு வர்த்தகர்களிடமிருந்து ஏராளமான பிரத்தியேக சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் புத்தாண்டு கொள்வனவிற்கு ஏற்றவாறு சிறப்பு ஊக்குவிப்புகளையும் இங்கு அனுபவிக்க முடியும்.
இந்த புத்தாண்டு சலுகைகளுக்கு மேலதிகமாக, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் ஹவலொக் சிட்டி மோலில் புத்தாண்டு நிகழ்வுகளையும் NDB வங்கி நடத்துகிறது.
பார்வையாளர்கள் பாரம்பரிய இனிப்பு விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வதுடன் மேலும் தங்கள் அன்பிற்கினியவர்களுடன் இணைந்த மனதிற்கினிய நினைவுகளை உருவாக்கி, புத்தாண்டு போட்டிகளில் பங்கேற்கலாம்.
NDB வங்கிக்கும் ஹவலொக் சிட்டி மோலுக்கும் இடையிலான இந்த பங்குடமையானது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமையான வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்குமான NDB இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.