தேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் புதிய அடித்தளத்தை உருவாக்கி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபராக (AP) உரிமம் பெற்ற முதல் வங்கிகளில் ஒன்றாக மாறியது.
நிபுணத்துவத்துடன் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி போன்ற விடயங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மாதிரி நகரம்தான் கொழும்பு துறைமுக நகரம். மிக உயர்ந்த தரத்தில் வர்த்தக, வாழ்க்கை முறை மற்றும் குடியிருப்பு வாய்ப்புகளை வழங்கும் பிராந்தியத்தின் நவீன சேவை மத்திய நிலையமாகவும் எதிர்காலத்தின் நிதி மையமாகவும் இந்த நகரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தீவு வாழ்க்கை, சென்ட்ரல் பார்க் வாழ்க்கை, மரினா, சர்வதேச தீவு மற்றும் நிதி மாவட்டம் என ஐந்து தனித்துவமான பகுதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தின் நிலப்பரப்பான 269 ஹெக்டேர் மொத்த நிலப்பரப்பையும், 6.4 மில்லியன் சதுர மீட்டர் கட்டப்பட்ட பரப்பையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. நகரத்தில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 273,000, 143,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மொத்த எதிர்பார்க்கப்படும் முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட துறைமுக நகர ஆணைக்குழு மசோதா, மாற்றத்தை உருவாக்கும் கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழிவகுக்கிறது, HNB