தெற்காசியாவின் முன்னணி ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, அண்மையில் துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில் நடைபெற்ற Eco Go Beyond Sustainable Schools திட்டம் 2023 விருது வழங்கும் நிகழ்வின் நிறைவுடன், நிலைத்தன்மை கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்நிகழ்வில் யுனிசெஃப் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெப்ரவரி 26, 2024 அன்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, இந்த ஆண்டின் இளம் நிலைத்தன்மை சாம்பியன்களின் சிறப்பான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அவர்களின் புத்தாக்கமான செயல்களை வெளிப்படுத்துவதற்கும், ஒரு வருட காலப் பயிற்சிப் பட்டறைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாணவர்கள் தலைமையிலான திட்டங்களின் உச்சக்கட்டத்தை பிரதிபலிக்கிறது. மேலும் அவர்களின் சமூகங்களுக்குள் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.
17 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட, Eco Go Beyond திட்டம், பாடசாலைகளுக்கு இடையில் நிலைத்தன்மை கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் புதிய தலைமுறையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைக்கு தலைமைத்துவம் வழங்கவும் ஆகும் மாற்றத்திற்கான MAS திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள பரந்த இலக்குகளுடன் இணைந்து, இளைஞர்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் MAS Holdingsன் உறுதிப்பாட்டின் அடிப்படையாக இந்தத் திட்டம் உள்ளது.