இலங்கையின் முதல்தர தொலைத் தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ‘SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2024’ தெரிவில் தொடர்ந்து பதின்மூன்றாவது வருடமாக ‘ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்’ விருதிற்கு இலங்கை வாடிக்கையாளர்களால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM) மூலம் நடத்தப்படுகின்ற மேற்படி விருதுகள், இலங்கை மக்களின் மனதை வென்ற வர்த்தக நாமங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும்.
இலங்கை நுகர்வோரின் வாக்குகளின் மூலம் அடையப்பெற்றுள்ள இந்த வெற்றியானது, சேவையில் சிறந்து விளங்குவதற்கான டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் டயலொக் வழங்கும் பங்களிப்பிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என கருதப்படுகின்றது.
டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக பதின்மூன்றாவது வருடமாக ‘ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக’ டயலொக் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
இலங்கையர்களின் வாழ்வை வலுவூட்டுவதற்கு எப்போதும் அயராது பாடுபடும் ஒரு நிறுவனம் என்ற வகையில், அந்த அயராத உழைப்பின் பிரதிபலிப்பை இலங்கையின் நுகர்வோர் மத்தியில் நாம் காணும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. ” என்றார்.