நிலைபேறான பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் சந்தை முன்னோடியாகவும், அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமுமாக திகழும் Ex-Pack Corrugated Cartons PLC, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் திகதி “Inspire Inclusion” நிகழ்ச்சியை முன்னெடுத்திருந்தது. பெண்களுக்கான வலுவூட்டலுக்கான நிறுவனத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, இந்த ஆண்டின் சர்வதேச தொனிப்பொருளுக்கமைவாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தன்று நிபுணத்துவ மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற புகழ்பெற்ற பிரத்தியேக பயிற்றுவிப்பாளரான தீப்தி பெரேராவினால் கருத்தரங்கு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணி-வாழ்க்கை சமநிலை மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இவரின் விளக்கங்கள் அமைந்திருந்தன. தனிப்பட்ட தன்னிறைவுடன் நிபுணத்துவ வெற்றியை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கான உறுதியான நுட்பங்களை பங்கேற்றிருந்தவர்களுக்கு வழங்கியிருந்தது. ஊக்கமளிக்கும் அவரின் வெளிப்படுத்தலினூடாக, வாழ்க்கையின் சகல கட்டங்களிலும் திறன்களை பயன்படுத்தவும், சமத்துவத்தை நோக்கி நகரவும் ஊக்கமளிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் பெருமளவில் பணிக்குழுவில் இணைந்து கொள்வதுடன், ஆக்கத்திறன், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திலும் அதிகம் பங்களிப்பு வழங்குகின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்வதற்கு, ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. உள்ளடக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முன்மாதிரியாக இருந்து ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.