தனிமையை அடிக்கடி உணர்த்திடும்
இரவு ….
பெண்களை மட்டுமல்ல ஆண்களையும்
வாட்டி வதைக்கும் இரவு ….
தன் துணையை நினைத்து உருக
வைக்கும் இரவு …..
மனோநிலையை மாற்றி ஆளும்
இரவு …..
சுவருக்குள் யாரோ மறைந்து நிற்பது
போல் உணர்த்தும் இரவு ……
விழியின் உறக்கத்தை துரத்தும் இரவு …..
நம்மால் விளைந்த வினைகளை
இரை மீட்டும் இரவு ….
பாவங்களை நினைத்து கண்ணீர்
வடிக்கும் இரவு …..
இருண்ட பக்கங்களை திரையிட்டுக்
உணர்த்தும் இரவு …..
நினைக்க இனிக்கும் நினைவுகளை
சுமந்து வரும் இரவு ….
உடலுக்கு ஓய்வு கொடுக்கும்
இரவு …..
பசி களைந்து பஞ்சாய் உடலை மாற்றும்
இரவு …..
கவிதைகள் அருவி போல் கொட்டும்
இரவு …..
பால் நிலவில் நீந்தி மடிசாயும்
இரவு ….
அமைதியாய் வேறோர்
உலகிற்கு அழைத்து
செல்லும் இரவு ….
விண்மீன் கடைகளில் ஒளிவீசும்
இரவு ….
ஆழ்ந்த சிந்தையில் ஆழ்த்தி
ஆச்சரியம் உணர்த்தும் இரவு ….
பொல்லாத இரவு…
57
previous post