மடமையின் உச்சத்தில்……
மானிட சமூகமே..
மயங்கிப் போயிருந்த காலமது.
அருட்கொடையாய்..
அல்குர்ஆனை அகிலத்தாரின்.
அமைதிக்கு சுமந்து….
வந்த மாதமே….
கண்ணியமிக்க ரமழானே.!
வயிறு நிறைய உணவுண்டு..
வகை வகையாய் பானங்களும்..
அழகழகாய் ஆடைகளும்..
ஆசையோடு அனுபவித்து…
செல்வந்த மானிடர்க்கு..
பசியோடு பட்டினியாய்…
பரிதவித்து வாழும் மக்கள்
படும் பாட்டை உணர்த்திடவே…
வந்துவிடு ரமழானே!
மனம் போகும்
போக்கினிலே……
மமதையோடு வாழ்ந்து..
பணம்தானே வாழ்க்கை என்று.
பாவங்கள் தான் செய்து…..
சைத்தானின் கைப்பிடியில்…
சிக்குண்ட மானிடா…
கை நிறைய தர்மத்தை…..
வறுமையில்……
வாடுகின்ற ஏழைகளுக்கு.
வாரி வழங்க செய்திடவே….
வந்துவிடு ரமழானே….
நல்லறங்கள் செய்திடாமல்…
தொழுகையும் சீரில்லாமல்..
தொலைத்துவிட்டு நிம்மதியை..
தொலைதூரம் சென்று விட்டாய்.
நள்ளிரவில் விழித்து விட்டு
தஹஜ்ஜத்தும் தொழுது விட்டு
அல்குர்ஆனை ஓதித்தான்
தேடிப்பார் நிம்மதியை ..
சேர்ந்து வரும் சந்தோஷம்..
நெஞ்செல்லாம் உல்லாசம்….
இத்தனையும் கொண்டு வரும்
சீரான ரமழானே…….!