53
பச்சைப் பசேலென
நாமிருந்தபோது
பலரும் எம்மை
நாடினர்
தென்றலச் சுவைத்து
தெம்மாங்கும் பாடினர்…
நாம் குடலையாகி
கதிர்
பிரசவித்த போது
விழுந்தது பேரிடி
சோனாமழைபெய்து
வெள்ளப் பிரவாகம்
எம்மை அழித்தது…..
மூலதனமிட்டோரும்
முகவரி தேடியோரும்
மூக்கில் கைவைத்து
முனகி நின்றனர்
வாரி கொடுக்கவில்லை
சரிந்தது மூலதனம்…..
லாபமும் இல்லை
நட்டமே தொல்லை
ஆண்டாண்டு காலம்
நம் தலைவிதி இதுதான்
ஆண்டவன் அளந்ததை
ஏற்றுக்கொண்டோம்……