48
சூரியனே!
தாகத்தில் வறண்ட பலஸ்தீனை
வாட்டி விடாதே!
மேகமே
வீடற்ற பலஸ்தீன் மக்களுக்கு
குடையாகிடு.
பறவைகளே!
நம் பலஸ்தீனின்
பசி தீர பழங்களை
சுமந்து
கொண்டு போங்கள்.
காற்றே
பலஸ்தீனில்
தென்றலாகு.
இரவே!
இருளை குறைத்து
வெளிச்சங் கொடு.
பனியே!
நோயை கொடுக்காது
ஆரோக்கியத்தை
அடுக்கடுக்காய் அள்ளிக் கொடு.
இறைவனை தொழுகின்ற
இயற்கையே!….
உலக
மனிதர்கள்
புனிதர்களின்
பிரார்த்தனைகளை
நீயும்
நிறைவேற்றிட
பிரார்த்தனை செய்
கருணையும் காட்டு.