40
கல்லூரியின் கல்வியில்
கலவிக்காய்
காதல் கொண்டு…!
மறைவான
இடம் தேடி
மறைந்து கூடல்
கொண்டு…!
கருத்தரிப்பைத் தடுக்க
மறுப்பு
மாத்திரை போட்டு…!
ஆடலும் பாடலுமாய்
காலம்போக
இத்தடை கடந்து…!
முட்டி முளைத்து
கருவில்
சிசு உருவாக…!
செய்வதறியாது
அறியாத
ஊர் சென்று…!
யாரும் அறியாது
பெற்றெடுத்து…!
தொட்டில் கட்டி
பாலூட்டாது
வாயைக் கட்டி…!
குப்பைத் தொட்டியில்
போட்டீரே!
உங்கள்
அழுக்கான செயலில்
பிறந்ததற்காகவா!
அழுக்கில்
போட்டீர்கள்?