51
வரலாற்றுச் சிங்கங்கள்
வழுக்கி விழுந்த
தருணமாய் அது…
இரு…
ஆவேசம் கொள்ளதே!
பண்டார வன்னியனின்
இறுதித் தலைமுறையாய்
இருந்து கொள்ளலாகுமோ
இன்னமும்
இயல்பாகவிரு
என் சகோதரங்கள்
தோற்றுப் போனதில்
எனக்கும் வலி அதிகமே
விவாத மேடைகளிட்டு
இனிக் கூப்பாடுகள்
போடுவதில்
என்னதான்
நடந்திடப் போகிறது
காத்திரு
குற்றங்களைச்
சரிசெய்யவென
நமக்குமோர் சந்தர்ப்பம்
கிடைக்காமலா போகும்
அதுவே
உனக்கான தனித்துவத்தின்
முதல்ப்படி
எனவே தான் காத்திரு
உள்ளன்போடும்
உனக்கான முகத்தோடும்.