47
என் இதயம்
திருடியவளே
கவிதையால்
வருடியவளே…
நீ பருகிய நீர் தித்தித்தது
நீரை தேனாக்கியவளே
என் இதயத்தை
கரையவைத்தவளே..
நீ மலைத்தேன்
உன்னை கண்டு
நான் மலைத்தேன்
நித்தமும்
உன்னை நினைத்தேன்
காதலில் திளைத்தேன்
நீ வர வேண்டும் என
விழைந்தேன்
உன்னுடன் சேர
துடித்தேன்
ஏன் இவ்வளவு
காதல் உன்மேல்
என வியந்தேன்
உன்னுடன்
இரண்டற கலந்தேன்…