50
வாழ்க்கை அது
வாழ்வதற்கே…
என் எண்ணங்களை
விசாலமாக்கி
முயல் ஆமையின்
கதை அறிந்து
இயலாமையைத்
தூக்கி எறிந்து
நம்பிக்கையில்
திடம் கொண்டு
வாழ்க்கைப் பாதையின்
இன்ப துன்பம் என்னும்
மேடு பள்ளம் கடந்து
நல் வாழ்விற்கான
நடைமுறைகளைக்
கடைப்பிடித்து
வாழ்க்கையின்
அர்த்தமதை அறிந்து
சந்தோஷத்தை
தன்வயப்படுத்தி
வாழ்வில் எதிர்ப்படும்
சவால்களுக்கு
முகம் கொடுத்து
இத் தரணியில்
நானும்……
ஒரு மனிதனாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.