இலங்கையில் 2023/-24 ஆம் ஆண்டுக்கான Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய விழாவில் அறிவிக்கப்பட்டனர்.
விழாவில் அரசு, தனியார் அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் இங்கிலாந்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுக்காக நடுவர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் பெறுநர்களைத் தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலைத்தன்மை, கலாசாரம் மற்றும் படைப்பாற்றல், சமூக நடவடிக்கை, வணிகம் மற்றும் புத்தாக்கம் என்பனவே அவையாகும்.
விருது பெற்றவர்கள் வர்த்தக வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூகத் தலைவர்கள் என அவர்களின் சிறந்த சாதனைகளுக்காகவும், இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்புக்காகவும் அங்கீகரிக்கப்பட்டனர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக்கினால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கூறுகையில், ‘இங்கிலாந்து மாணவர் விருதுகள் இலங்கையில் மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடுகின்றன. இவர்களின் பங்களிப்புகள், நம்பமுடியாத திறமை, உந்துதல் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் இறுதிப் போட்டியாளர்கள், UK மாணவர்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அவர்கள் செய்த சிறந்த சாதனைகளுக்கு மட்டுமல்ல, UK கல்வியின் மாற்றத்தக்க தாக்கத்திற்கும் சான்றாகும்’ என்று தெரிவித்தார்.