சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதிகாரமளித்தலைக் கொண்டாடும் நிகழ்நிலை சுகாதார மன்றமான “அவள் செழித்து வளர்கிறாள்” (She Thrives) என்ற இணையதளத்தை Suwa Diviya ஆனது அறிமுகப்படுத்துகின்றது.
மார்ச் 9, 2024 அன்று காலை 9.30 முதல் காலை 11 மணி வரை நடைபெற்ற இம்மெய்நிகர் நிகழ்வானது, இலங்கை வாழ் பெண்களுக்கு அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ளும் வகையினில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தியது. Suwa Diviya என்பது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இது நீரிழிவு நோயினைத் தடுப்பது மற்றும் முகாமைத்துவம் செய்வதில் இது கவனம் செலுத்தியது.
“She Thrives” என்பது சாதாரண சுகாதார மன்றம் அல்ல; இது ஒரு முன்னேற்றுவிக்கும் தளமாகும், இது பெண்களை அவர்களின் தனித்துவமான சுகாதார விடையங்கள் தொடர்பாக ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் போன்ற பரவலான பிரச்சினைகளை கையாள்வதிலிருந்து ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறைகளை ஆராய்வது வரை, இந்த மன்றம் பங்கேற்பாளர்கள் வளரத் தேவையான அறிவு மற்றும் உத்திகளினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியினை மருத்துவ ஆலோசகரும் பொதுமருத்துவருமான “Suwa Diviya” நிறுவனத்தின் இஸ்தாபகருமான Dr. கயத்ரி பெரியசாமியின் தலைமையில் நடைபெற்ற “அவள் செழித்து வளர்கிறாள்” எனும் மகுடத்திலான, பெண்களின் உடல்நலம் தொடர்பாக புகழ்பெற்ற நிபுணர்களின் தலைமையில் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.