சரித்திரம் படைத்து சாதனை புரிவான்
தரித்திரம் தடுத்திடுவான்
நரித்தனம் வருவதை அழித்திடுவான்
சரித்திரம் சீர் பெற்றிட வாழ்ந்திடுவான்
வந்தது போனதை மறந்திடுவான்
வாழ்ந்ததை நினைத்து மறந்திடுவான்
பந்த பாசத்தை நினைத்திடுவான்
வந்தே மாதரம் பாடிடுவான்
மண்ணை உழுது வாழ்ந்திடுவான்
உண்மை பேசி உயர்ந்திடுவான்
கண்ணைக் காப்பதுபோல் காத்திடுவான்
திண்ணம் திழைத்து திகைத்திடுவான்
வெற்றி வேங்கையாக வென்றிடுவான்
ஊற்றிய உணர்வை உயர்த்திடுவான்
தேற்றிய மனதில் தெளிவடைவான்
மாற்றிய எண்ணத்தில் வாழ்ந்திடுவான்
அடிமை விலங்கை உடைத்திடுவான்
கடின காரியத்தை விட்டிடுவான்
தேடிய செல்வத்தை அடைந்திடுவான்
பாடிய பாடலை மீட்டிடுவான்
தடை தாண்டி விளையாடிடுவான்
மடை திறந்த வெள்ளம் தடுத்திடுவான்
நடை போட்டு நடந்திடுவான்
பாடை கட்டிப் பாடி பயணமாவான்
உண்மை சொல்லி உயர்ந்திடுவான்
நன்மை செய்தோருக்கு நன்றியுரைப்பான்
வெண்மை வெளிச்சம் வென்றிடுவான்
கண்ணிமை போல் காத்திடுவான்
சீரோடு சிறப்புக்களில் சிறந்திடுவான்
பாரோடு புகழை பாடிடுவான்
பேரோடு எண்ணத்தை போக்கிடுவான்
ஊரோடு உண்மையை உயர்த்திடுவான்