கண்ணெதிரே தோன்றி – என்
கல்பினிலே ஊன்றி
எண்ணங்களில் வண்ணங்களை
எடுத்தோத வைத்தவளே
சலனங்கள் எனக்குள்
சங்மித்தே படர்ந்திட
மௌனங்கள் எனக்குள்
மடைதிறந்தே போகிறது
காதல் வயப்பட்டே நானும்
கானங்களை இசைக்கிறேன்
களிப்புகளை
உணர்ந்தே நாளும் – மன
செழிப்புகளை ரசிக்கிறேன்
வாழ்க்கையின் வேட்கைகள்
வாகையாய் தெரிந்திட – உன்
வருகையைத் தினமுமாய்
வரவேற்க பார்த்திருக்கிறேன்
உன்னோடு என் வாழ்க்கை
உரிமையாய் இணைந்திட்டால்
கண்ணோடு வைத்தே உனை
காலமெல்லாம் காத்திடுவேன்
உள்ளத் துடிப்பின் ரீங்காரம்
உன் பெயராய் ஒலிக்கிறது
மெல்லத் திறந்திடு உன் மனதை
மேன்மையாகிடும்
நம் வாழ்க்கை
இதயத்தில் இறுக்கமாய்
இரண்டறக் கலந்தவளே
உதயத்தில் உலாவிட
உண்மையாய் வந்துவிடு
அன்பே….
களங்கமில்லா
என் உள்ளம்
கவலையின்றி
ஒளிர்ந்திட
கனிவாய் மொழி பேசி
காதலைத் தந்துவிடு!