71
உன்னோடிருந்த பள்ளிக்காலம்!
இனிய வசந்த காலம்!
நெஞ்சம் தனில் இனிக்கும்……
நினைவை தந்த உன் சிரிப்பு!
ஏன்?நீ அழுதவுடன்…..
மனதில் வலியை தருகிறதோ!
எரி கனலாய் கொதிக்கும்….
நெஞ்சம் தனில்….
நீங்கா இடம் பிடித்தாய்!
வந்தாய்! வாழ்ந்தாய்!
கல்லூரி கடந்தும்….
வாழ்க்கையின் எல்லை வரை…..
உன் தோழியாய் தொடர!
வல்லவனை வேண்டுகிறேன்!