கொழும்பு, மருதானை ரயில்வே களஞ்சியசாலை வளாகத்தில் ‘வேகா’ இன்ஜினியரிங் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட மின்சார முச்சக்கரவண்டிகள் உற்பத்தி மற்றும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்துக்கு மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ‘வேகா’ பொறியியல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க, ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார, மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் அமைச்சருடன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.