மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்துக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இந்த ஒன்றியம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்தே அதன் தலைவர் பதவிக்கு வேலுகுமார் எம்.பி. தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, நயனா வாசலகே, உதயகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்ற போது அதில் பல கட்சிகளின் தலைவர்களும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.