Home » கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர் கோரக் கொலை!

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர் கோரக் கொலை!

19 வயதான இலங்கை இளைஞர் சந்தேகத்தில் கைது

by Damith Pushpika
March 10, 2024 6:46 am 0 comment

கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு சிறார்கள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வியாழனன்று இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனடாவிற்கு புதிதாக வருகை தந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதை கொண்ட சிசுவொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்துடன் வசித்த வந்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞன் ஒருவனே இந்த கொலையை செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

”இது முழுமையாக அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்” என ஒட்டாவாவின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியிலிருந்து அந்த நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 22:52க்கு அவசர அழைப்பொன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரை விரைவாக கைது செய்துள்ளதாக ஒட்டாவா பொலிஸ் தலைமை அதிகாரியான எரிக் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். உயிரிழந்த நிலையில், தாய், நான்கு குழந்தைகள் மற்றும் அந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதான குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத குழந்தை கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் மீது 6 கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலைமை பொலிஸ் அதிகாரி ஸ்டப்ஸ் கூறுகின்றார்.

கனேடிய பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, டி-சொய்சா பாதிக்கப்பட்டவர்களுடன் சிறிது காலமாக வாழ்ந்து வந்தார், அதே நேரத்தில் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு அவரது 19 ஆவது பிறந்தநாளையும் கொண்டாடினர்.

சந்தேகநபர் முன் குற்றப் பதிவுகள் ஏதும் இல்லாதவர், குடும்பத்துக்கும் டி சொய்சாவுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இளைஞன் சமீபத்தில் ஒட்டாவாவில் தனது கல்வியைத் தொடர அவர்களின் வீட்டின் அடித்தளத்திற்குச் குடிபெயர்ந்திருந்தான், பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் இருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவரது பெற்றோரையும் சந்தித்தனர்.

எவ்வாறாயினும், டி சொய்சா பாடசாலையில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அண்மையில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவரது நண்பர் தெரிவித்ததாக பௌத்த மதகுரு தெரிவித்தார்.

ஒட்டாவாவில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கொலைச் சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”உண்மையில் சோகமான சம்பவம். இது நாட்டின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்” எனவும் அவர் கூறியுள்ளார். “இப்பகுதியினர் மீதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சம்பவம் நடந்த இடத்திலிருந்து இப்பகுதியினர் விலகியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார். இந்த சம்பவமானது முதலில் துப்பாக்கி சூடு என கூறப்பட்ட போதிலும், பின்னர் அது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட கொலை என கண்டறியப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தைக் “கொடூரமான வன்முறை” என்று குறிப்பிட்ட கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஒட்டாவா நகரின் மேயர் மார்க் சட்க்லிஃப் “நகரின் வரலாற்றில் நிகழ்ந்த மிக அதிர்ச்சிகரமான வன்முறை சம்பவம்” என்று தெரிவித்தார். “பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வது குறித்து பெருமை கொள்கிறேன். ஆனால் இந்த சம்பவம் ஒட்டாவா நகர மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, விசாரணையை நடத்தி வரும் அவசர கால ஊழியர்களுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை கல்விக்காக கனடா வரும் இளைஞர்களின் உள ஆரோக்கியத்தில் அவர்களது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்ெகாண்டார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division