தளினால் முழுமையடைந்த ஒரு நாடாகும். குறிப்பாக கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் உலோகத்தை அடிப்படையாகக் கொண்ட வெள்ளி போன்ற வணிகப் பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டதாகும். உலகில் செப்பு உற்பத்தி செய்யப்படுவது சிலி நாட்டிலாகும். எவ்வாறாயினும் 1950ஆம் ஆண்டு வரைக்கும் சிலி நாட்டின் பொருளாதாரம் தங்கியிருந்தது தனியார் துறையிடமாகும். தனியாரிடமிருந்த பிரதான பொருளாதார நடவடிக்கைகளை தேசிய மயப்படுத்தும் நடவடிக்கைகள் பின்னைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
வளங்கள் அனைவருக்குமிடையில் பிரிந்து செல்ல வேண்டும் என்பதுடன், அது நாட்டின் சிறு தரப்பினரால் பயன்படுத்தப்படுகின்றது என்ற அடிப்படையில் இந்த தேசிய மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது அனைவருக்குமிடையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து இதன் நோக்காக அமைந்தது. அமெரிக்கா, சீனா, பிரேசில், ஆர்ஜன்டீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சிலிநாட்டின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. இந்த வளங்களை தேசியமயமாக்குவதன் மூலம், அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு எதிராக சில உலோகங்கள் போன்ற பொருட்களை சிலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்த தேசியமயமாக்கல் அவ்வாறான எதிர்வினைகளை நோக்கிப் பயணித்தது. எவ்வாறாயினும் 1973ஆம் ஆண்டில் சோசலிச நிலைப்பாட்டில் இருந்தவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்த்து இராணுவச் சதியின் மூலம் பினோ சேவின் தலைமையில் சர்வாதிகார ஆட்சியை ஆரம்பித்தனர்.
அதன் போது 1970ஆம் ஆண்டுகளில் உலகில் எண்ணெய் விலை குறைந்த மட்டத்தில் இருந்ததால் ஈட்டிக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து கடன் பெறு முடிந்தது. அதன் போது வளர்ச்சியடைந்த நாடுகள் மிகவும் குறைந்த வட்டி வசதிகளின் கீழ் கடன் பெறும் வாய்ப்புக்கள் இருந்தன.
இதனால் அனேக நாடுகள் 1970ஆம் ஆண்டி நடுப்பகுதியில் இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டன. 1980ஆம் ஆண்டாகும் போது கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரித்த போது கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியை நோக்கி பயணிக்க நேர்ந்தது. இந்த நெருக்கடியை சிலி நாடும் எதிர்கொண்டது.
அரசாங்க வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமல் அவர்கள் அந்த நெருக்கடியில் பயணிக்க நேர்ந்தது. இங்கு கடன் சேவை இல்லை என்பதால் , திருப்பிச் செலுத்தும் நெருக்கடி ஏற்பட்டது. முக்கியமாக நாட்டில் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்தது.
1980ஆம் ஆண்டாகும் போது பணவீக்கம் 10% ஆக இருந்தது. அது 1983ஆம் ஆண்டாகும் போது 27% வரை அதிகரித்தது. 1990ஆம் ஆண்டின் முற்பகுதியில், அது 20% வரை உயர்ந்துள்ளது. இது அதிக நெருக்கடிமிக்க பணவீக்க நிலையாக இல்லாத போதிலும் அதிக பணவீக்க நிலையாகவே காணப்பட்டது. அதேபோன்று கடன் நெருக்கடியுடன் மற்றொரு முக்கியமான விடயமும் நடந்தது.
சிலி நாட்டின் வங்கிக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது. அதனுள் வங்கித் துறையின் சரிவை நிறுத்துவதற்கு அந்நாட்டின் திறைசேரி மற்றும் மத்திய வங்கி பாரிய தலையீட்டை மேற்கொண்ட போதும் சில வங்கிகள் முழுமையாகவே வீழ்ந்தன.
இந்த நிலையினுள் சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1982ஆம் ஆண்டில் அது அவ்வாறு இடம்பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை சிலிநாடு மேற்கொண்டாலும் வேறு நாடுகள் மறுசீரமைப்புக்குச் சென்றன.
சிலி நாட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பணம் செலுத்தும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும். அதாவது ஐந்தாண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை பத்து வருடங்களாக நீடித்ததால் கடன் தவணை குறையும். அதனடிப்படையில், 1983, 1985 மற்றும் 1989ம் ஆண்டுகளில், IMF உதவியுடன் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சிலிநாடு லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல உண்மையில் BRADY BOND திட்டத்தில் நுழையவில்லை. அந்த வகையில் அவர்கள் மற்ற கடன் பத்திரங்கள் வெளியிடுவதை மேற்கொள்வில்லை.
அமெரிக்க திறைசேரி மற்றும் IMF உதவியின் கீழ், அதற்காக காலாவதியாகும் காலம் நீடிக்கப்பட்டது. இந்த நெருக்கடியால் சிலியில் பொருளாதார நெருக்கடி உருவானது. இந்த பொருளாதார நெருக்கடி எந்தளவுக்கானது என்றால், தனிநபர் வருமானம் 20% ஆகக் குறைந்தது.
1991ஆம் ஆண்டில் மீண்டும் வழமைக்குத் திரும்பியது. 1981ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்த தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியை மீண்டும் சிலி நாட்டினால் மீட்டிக் கொள்ள முடிந்தது 1991 ஆம் ஆண்டிலாகும். 1980 மற்றம் 1990ஆம் ஆண்டு கால எல்லைகளுக்கு அமைய சிலி நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியுடன் 1980 – _90 காலப்பகுதி லத்தின் அமெரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்னோக்கி நகர்ந்த காலப்பகுதியாகும்.
1983, 1985 மற்றும் 1989 கடன் மறுசீரமைப்புகளைத் தொடர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளினுள் சிலி நாட்டு அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு கடன் மறுசீரமைப்பு செயல்முறையையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு மேல் நோக்கி வருவதற்கு காரணமாக அமைந்த பல விடயங்கள் உள்ளன.
அதாவது பொருளாதாரக் கொள்கை தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே பாரிய உடன்பாடு ஏற்பட்டது. அதனடிப்படையில், நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் தொடர்ந்தது. கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி இந்த நெருக்கடி புரிந்து கொள்ளப்பட்டது.
மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றுவது மிகவும் முக்கியமாகும். மத்திய வங்கியினை சுயாதீனமாக்கும் சட்டத்துடன், பணவீக்கக் கட்டுப்பாடு மத்திய வங்கியின் முக்கிய விடயமாக ஆக்கப்பட்டு, இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, 1991ல் 22% ஆக இருந்த பணவீக்கம் 2001இல் 3.5% ஆகவும், 2021 இல் 5% க்கும் குறைந்த மட்டத்திலும் இருந்தது.
மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக ஆக்கியதோடு, அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைக்க வரிகளை வசூலிக்கத் தொடங்கியது.
ஒருபுறம் அரசின் செலவுகள் குறைக்கப்பட்டன. அரசாங்கத்தின் கீழ் இருந்த நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம், தனியார் துறையை பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு, மத்திய வங்கி சுயாதினமயமாக்கலின் பின்னர் மத்திய வங்கியின் மூலம் அரசாங்கம் கடன் வாங்கும் முறை முற்றிலும் கைவிடப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு தொழில்முயற்சிகளை பலப்படுத்தல், அதேபோன்று சட்டத்தின் ஆட்சியைப் பேணிச் செல்லவும் சிலி நாட்டினால் முடிந்தது. சுயாதீன நிறுவனங்கள் செயல்பட இடம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் மோசடி, ஊழல், வீண் விரயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் லஞ்சமும் ஊழலும் இருந்தது. அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசு நிறுவனங்களைச் சுயாதீனமாக்குவதற்கு முடிந்தது. அதன்மூலம் , மோசடி, ஊழல், வீண் விரயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் சுயாதீனமயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. அதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் நல்ல சூழலை உருவாக்கவும் முடிந்தது.
கடந்த 30 ஆண்டுகளினுள், சிலி நாடு எந்தவொரு கடன் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்காமல் குறுகிய கால எல்லைக்குள் கடன் தொடர்பான நெருக்கடிகளைத் தீர்த்துக் கொண்டு மீண்டும் முன்னேற முடிந்திருக்கின்றது. சிலி நாட்டிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன. கடன் நெருக்கடி ஏற்படாதவாறு எவ்வாறு நாட்டை மீளக் கட்டியெழுப்புவது என்பதில் உலகிற்கு அவர்கள் முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர்.
சுபத்ரா தேசப்பிரிய தமிழில் - எம். எஸ். முஸப்பிர்