ஒரு சொத்தை அடமானமாகக் கொண்டு கடன் வழங்கப்படும் போது, அந்தக் கடனை செலுத்தத் தவறும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. கடன் என்பது அவ்வாறான ஒன்றுதான். கடன் எடுக்கும் அனைவரும் இரண்டு கனவுகளைக் காண்பார்கள். அதில் ஒன்றுதான் உடனடி பணத்தேவையைக் கையாள்வது. தான் சிக்கியுள்ள நிலைக்கு மத்தியில் செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை என்ற காரணத்தினால் கைமாற்றாக வாங்கி பணத்தேவையைச் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. அடுத்த முறை கிடைப்பதைக் கொண்டு அந்த சிக்கலை முடித்துக் கொள்ள முடியும் என்பது கடன்படுவோரின் நம்பிக்கையாகும்.
பராடே அதிகாரத்தை இந்த சந்தர்ப்பத்தில் வழமை போன்று முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிப்பது என்பது பல வியாபார நிலையங்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றது என்பதாகும். வியாபாரம் ஒன்றை அவ்வாறு விலை மனுக் கோரி ஏலத்தில் விடுவது என்பது ஒரு மனிதரின் வருமான வழியை வீழ்த்துவது மாத்திரமல்ல, அந்த வியாபார நிலையத்தில் பணியாற்றும் பலபேரின் மாதாந்த வருமானத்தை இல்லாமல் செய்வதுமாகும். முகாமைத்துவத்தின் இயலாமை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்புடையதாகாது.
அதற்காக கிராமங்களில் பெறப்பட்டுள்ள கடன் பிரச்சினைகளுக்காக பராடே செயற்படாது. கிராமிய மக்கள் கடன் பெறுவது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கோ அல்லது வியாபாரம் ஒன்றை நடத்திச் செல்வதற்கேயாகும். எமது நாட்டின் கீழ் மத்திய தரத்திலிருந்து அதற்கும் மேலே ஒரு அடி செல்லும் வரைக்கும் மாதத்தின் பண ஓட்டம் செயற்படுவது “கடன்பட்டுத்தான்” . கட்டணப் பட்டியல்கள் தேங்கிக் கிடக்கின்றன. வீட்டுச் செலவுகளுக்காக மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சுற்றித்திரிய வேண்டிய நிலை. அவ்வாறான நேரங்களில் நினைவுக்கு வருவது அடகுக் கடைகள்தான்.
இதற்காக வீட்டின் உறுதிப் பத்திரத்திலிருந்து வீட்டிலிருக்கும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற அனைத்தையும் அடமானம் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு சிக்கிக் கொண்ட கிராம மக்களுக்காக உறுதிகளோ அல்லது அவற்றை சான்றுபடுத்துவதற்கான எதுவும் இல்லை. நெருப்பு வட்டிக்கு பணத்தை வழங்குவது வங்கிகளல்ல. அருகில் இருப்பவர்களாகும். அவை நிதி நிறுவனங்கள் அன்றி, பண முதலைகளாகும். அவ்வாறு சிக்கிக் கொள்ளும் போது முதலாளியின் அடியாட்கள் வந்து வைக்கப்பட்ட அடமானத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்.
இந்நாட்டில் 24 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் நுண்கடன் பொறிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக அண்மைய தரவுகள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமை மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனால் இந்தப் பெண்களுக்கு கிடைத்தது எதுவுமில்லை. கடன் மலைக்குள் சிக்கிக் கொண்டுள்ள அவர்களுக்காக நேற்று முன்தினம் ஒரு சிலர் ஒன்றுகூடி மாற்று வழி ஒன்றை முன்வைத்தனர்.
நுண்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் முறையற்ற நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றுள்ள வறிக மக்களுக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குமாறு கோரி வீதியில் இறங்கி குரல் எழுப்பியது புதிய மக்கள் முன்னணியாகும். அதன் மத்திய குழு அங்கத்தவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனத்தைச் செலுத்தி, பொலிஸ் மாஅதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரிடத்தில் கோரிக்கையினை முன்வைத்தனர்.
2016ம் ஆண்டின் 06ம் இலக்க நுண் நிதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் 1989ம் ஆண்டின் 30ம் இலக்க சேவை அமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துமாறு புதிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருப்பது சாதகமான சட்ட காரணங்கள் பலவற்றை முன்வைத்தேயாகும். அவற்றை நடைமுறைப்படுத்தும் வரைக்கும் அரசாங்கம் உடனடியாகத் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு கிராமிய மக்களுக்காக குறித்த கடனைச் செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துமாறும் அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதரவற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்நாட்டின் கிராமப்புற மக்களுக்காக உடனடி நிவாரணமாக இத்தகைய ஒரு நடவடிக்கை இந்த தருணத்தில் இன்றியமையாததாகும். பிராந்திய மட்டத்தில் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வரைக்கும், கிராமிய அப்பாவி மக்களின் காணி உறுதிகள் மற்றும் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சட்டத்தினால் ஏதேனும் சலுகை வழங்கப் படவே வேண்டும்.