காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதி ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் தேசிய நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்நாட்டு ரயில் பாதைக்குக் கீழாக நிர்மாணிக்கப்படும் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் கல்கமுவ – ஹெட்டதிவுல – காசிக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், சுராகிமு புகையிரத தேசிய இயக்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளின் பின்னர், காட்டு யானைகள் இந்தப் ரயில் பாதைகளின் ஊடாகச் கடந்து செல்லும் போது ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களில் புகையிரதங்களில் மோதியதால் அதிகளவான யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகின. 150 – 200 அளவிலான காட்டு யானைகள் தொடர்ச்சியாக ரயில் பாதையினூடாக கடந்து செல்லும் அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள காசிக்கோட்டை, கெட்டதீவுல பிரதேசத்தில் ரயில் பாதையின் கீழ் இந்த வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இந்திய கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மாஹோ – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த வனவிலங்குச் சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டதோடு, அதன் நிர்மாணப் பணிகள் இவ்வாறு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுரகிமு லங்கா மன்றத்தின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் இங்கு அறிவுரை வழங்கும் போது கூறியதாவது,
“இலங்கையில் அரசர் காலத்தில் கூட இடம்பெறாத, அதற்கு பின்னான காலத்தில் இலங்கை வரலாற்றிலும் குறிப்பிடப்படாத, இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதையாக இருப்பது இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் காசிகோட்டை சுரங்கப்பாதையாகும். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியாகும். இலங்கை வரலாற்றில் எழுதப்பட வேண்டிய விடயமாகும். வனவிலங்குகளிலிருந்து மனிதர்களைப் பிரிக்க முடியாது. அவை பாதையைக் கடக்கும் போதே மோதல்கள் இடம்பெறுகின்றன.
அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு சுரங்கப்பாதை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் தனித்துவமான அளவுகோல்களில் ஒன்றாக கருதப்பட முடியும். இது வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் பெறுமதிமிக்க தீர்மானமாகக் கருதப்படுகிறது. காட்டு மிருகங்கள் அடிக்கடி பயணிக்கும் பழக்கமான பாதையினுள் எவ்வாறான தடைகள் இருந்தாலும் காட்டு யானைகள் அவற்றின் ஊடாகக் கடந்து செல்கின்றன. பலர் இதை ஒரு அபிவிருத்தித் திட்டமாகப் பார்த்தாலும், இது நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய புண்ணிய காரியமாகவே நான் பார்க்கிறேன். இந்த இடத்தில் மாத்திரம் எட்டுக்கும் மேற்பட்ட யானைகள் புகையிரதத்தில் மோதி பலியாகியுள்ளன. மனிதாபிமானம் உள்ளவர்களால் இதனைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதுபற்றித் தெரிவித்து அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திற்கு மிகக் குறுகிய காலத்தில் பதில் அளிக்கும் அளவுக்கு அவர் தனது பொறுப்பை திறமையாக நிறைவேற்றியுள்ளார். அமைச்சின் செயலாளர் நடைமுறையில் மேற்கொள்ளக்கூடிய அனைத்தையும் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினார்” என்றார்.
வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறியதாவது,
“நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது காணப்படும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கான குறைந்த மதிப்பீட்டைச் சரி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்த முதலாவது சந்தர்ப்பமாக இந்த வேலைத்திட்டத்தைக் குறிப்பிட முடியும். தனியாக அபிவிருத்தியைத் தேடிச் செல்ல முடியாது என்பதை உலகின் பல நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. உலகம் நிலையான அபிவிருத்தி என, எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் ஒரு நாட்டிலுள்ள குறைவான வளங்களை மிகவும் திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்தும் நிலைப்பாட்டை உலகம் உருவாக்கியுள்ளது. இதில் எதிர்கால அனைத்து சந்ததியினருக்கும் இயற்கை வளங்களை பாதுகாத்து, தற்போதைய மக்களினது வாழ்க்கை நிலைகளை உயர்த்துவதற்காக எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்பது தொடர்பில் உலகம் முழுவதிலும் பேசப்படுகின்றது. முக்கியமாக காலநிலை மாற்றங்களின் காரணமாக மக்களால் வாழ முடியாத சூழ்நிலை, தம்மால் தனித்து கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையினுள் ஏற்படும் அழுத்தங்களை முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை தற்போது உணர்கின்றது. கடந்த நான்கு வருட காலத்தில், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இலங்கையின் வீதிகள், மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற உட்கட்டமைப்புகள் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன. அந்த நாட்களை விடவும் கடுமையான வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் காரணிகள் தொடர்பில் கவனம் எடுப்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் காலா காலமாக எமது நாட்டில் இருந்து வரும் யானை – – மனித மோதல்கள் தொடர்பில் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறார்களே தவிர, அது தொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்துவதற்கு சில துறைகளில் இணக்கப்பாடுகள் இல்லை.
இவ்வாறு கடனாகப் பெறப்பட்ட 36 பில்லியன் டொலரை நாம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் எமது நாட்டுக்கு தொடர்ந்தும் கடனாக எந்த தொகையையும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இந்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் நோக்கில் இலங்கையின் அரசியல்வாதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட நாடுகளுக்கிடையில் நீண்ட உரையாடல் இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து கடனை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களுக்கு இணங்கி நடக்க வேண்டிய நிலைக்குள் நாம் இருக்கின்றோம்.
நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், கடனாகப் பெறப்படும் நிதியின் மூலமாவது மனித உயிர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தவும் ஒரு உன்னத நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான பாரியளவிலான காணிகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து பயனுள்ள முதலீடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஸ்டேஷன் பிளாசா எண்ணக்கரு கடந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் கீழ், எந்த ஒரு இடத்திலும் புகையிரத நிலையங்கள் அல்லது காணிகளின் உரிமையை மாற்றாமல் நீண்ட கால குத்தகை அடிப்படையில் பயனுள்ள முதலீட்டிற்காக வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும்” என்றார்.
ஜாதிக சங்க சம்மேளனத்தின் செயலாளர் கட்டக்கடுவே சுமனரத்ன தேரர், சுரகிமு லங்கா மன்றத்தின் தலைவர் பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியிலாளர் ரஞ்சித் ரூபசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான யூ.கே. சுமித் உடுகும்புர, இசாக் ரஹூமான், புகையிரத பொது முகாமையாளர் எம். கே. டப்ளிவ். பண்டார உள்ளிட்ட அதிகாரிகள், நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான இந்திய இர்கோன் நிறுவனத்தின் பிரதிநிதிகள், CECB நிறுவனத்தின் பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள், சுரகிமு லங்கா மன்றத்தின் அங்கத்தினர் சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அம்பன்பொல பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் இந்நாடு, இந்நாட்டின் எதிர்காலம், சுற்றாடல், சுற்றாடல் பாதுகாப்பின் மக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் சுரகிமு லங்கா மன்றம் உள்ளிட்ட சுற்றாடல் அமைப்புக்கள் பல்வேறு முறைகளிலான நடைமுறைகளின் கீழ் தொடர்ச்சியாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
பல்வேறு காரணங்களினால் அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடைகள் தோன்றியிருக்கின்றன.
எனினும் பாஹியங்கல ஆனந்த தேரர் உள்ளிட்ட சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகளை நாம் சந்தித்த போது போராட்டங்கள் போன்ற செயற்பாடுகளின்றி நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தி எம்மால் செய்ய முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வது தொடர்பில் ஒரு அமைச்சு என்ற வகையில் அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கான வாக்குறுதியை வழங்கினோம்.
இவ்வாறு பெறப்பட்டுள்ள கடனை எதிர்காலச் சந்ததியினரே மீளச் செலுத்த வேண்டும்.
எம்.எஸ். முஸப்பிர்