99
நிலவொளியில் எங்கள் காதல்
வானை எட்டித் தொடுகிறது
நட்சத்திரங்களின் நடனம்,
இரவின் மெல்லிசை,
இனிமையான மென்மையான
அவளின் அரவணைப்பு
எல்லாச் சங்கதிகளும்
சடுதியாகச் சரணடைகின்றன.
அந்தி அணைப்பின் சாயலில்
எங்கள் இதயங்கள்
பிணைக்கப்படுகின்றன
மென்மையான
கருணையான காற்று
இரகசியங்களை
வெளிப்படுத்திக்
கிசுகிசுக்கின்றது
ஒவ்வொரு கதையிலும்
புதியதோர்
உணர்ச்சிப் பிரளயம்.
அவள் கண்கள்
நட்சத்திரங்களைப் போல
இரவை ஒளிரச்
செய்கின்றன
அன்பின் முடிவில்லாமை
ஆன்மாவை வழிநடாத்துகிறது.
கனவுகளின் பள்ளத்தாக்குகள்
ஆசைகளின்
சிகரங்கள் வழியாக
எங்கள் காதல்
பிரகாசமாய் எரிகிறது
என்றென்றும்
எரியும் நெருப்பாக!