68
தங்கமான அரிவை ஆயினும்
தக்ககாலம் வதுவை ஆகிட
அங்கமணி இன்றியே வீணாய்
அல்லலுறும் இழிவைக் கேளாய்
சிங்கநாதம் செய்தே தோழா
சிந்தையோடு எய்வோம் வாராய்
மங்கையர்கள் மன்றல் புரிந்தே
மகிழ்வோடு வாழ்தல் நிலைக்க
பங்கமான எண்ணம் களைந்து
பகலவன் கண்ட பனிபோல்
அங்கமணி அறவே ஒழித்தால்
அகிலம் நம்மை வாழ்த்துமே