82
மனம் விட்டு பேச
யார் வேண்டும்
கேட்கிறார்கள்
யார் யாரெல்லாமோ
உறவின் வடிவங்களில்
சுற்றிவர இருக்கவே
செய்கிறார்கள்
ஆனாலும் நான் நினைத்த
வடிவில் அல்ல
யாருமே வேண்டியதில்லை
மனம் இருக்கும்
வகையில் நீங்கள்
இருக்கவிட்டிருந்தால்
நானோ மனக்கதவை
அடைத்து
அதன் திறப்பை
தூர எறிந்து
கன நாள் ஆகிறது