செலிங்கோ லைஃப் 2023 ஆம் ஆண்டில் வேர்ல்ட் ஃபைனான்ஸால் ‘இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்’ எனத் தெரிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து 10ஆவது ஆண்டாக இந்த விரும்பத்தக்க விருது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செலிங்கோ லைஃப் இலங்கையின் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) தெரிவுசெய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டை நாட்டின் ஆயுள் காப்புறுதிச் சந்தையில் சர்வதேச மற்றும் உள்ளூர் பாராட்டுக்குரிய ஆண்டாக்கியது. இலங்கையில் இந்த விருதை தொடர்ச்சியாக வென்ற ஒரேயொரு ஆயுள் காப்புறுதி நிறுவனம் செலிங்கோ லைஃப் ஆகும்.
மாஸ்மியூச்சுவல் (அமெரிக்கா), அவிவா (யுகே), கனடா லைஃப் (கனடா), டிஏஎல் (அவுஸ்திரேலியா), சுவிஸ் லைஃப் (சுவிட்சர்லாந்து), சிஎன்பி அஷ்யூரன்ஸ் (பிரான்ஸ்), சைனா லைஃப் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களின் உயர்ந்த நிறுவனங்களில் செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்கு World Finance விருது வழங்கியுள்ளது.
இன்சூரன்ஸ் குரூப் (சீனா) மற்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் (இந்தியா), போன்றன அந்தந்த நாடுகளில் உள்ள சிறந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களாக 2023 ஆம் ஆண்டு சஞ்சிகையின் விருதுகளில் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தகது.