Radisson Blu Resort Galle மற்றும் Radisson Hotel Colombo ஆகிய ஹோட்டல்களுக்கு சிறந்த பாதுகாப்பு கொண்ட ஹோட்டல்கள் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுவீடனை தளமாகக் கொண்ட சர்வதேச சான்றிதழ் நிறுவனமான Safehotels Alliance AB இதனை வழங்கியுள்ளது. உலகளவிலான ஹோட்டல்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்களுக்கு “The Global Hotel Security Standard” சான்றளிக்கின்றது. விருந்தினர்களது பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் இந்த இரண்டு ஹோட்டல்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பையே இந்த பாராட்டு உறுதிப்படுத்துகின்றது.
அத்துடன் Radisson Blu Resort Galle மற்றும் Radisson Hotel Colombo ஆகியவை இலங்கையின் முதல் இரண்டு ஹோட்டல்களாக Safehotels சான்றிதழை பெற்றுள்ளமையின் மூலம், இலங்கையின் விருந்தோம்பல் துறைக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Radisson Hotel Colombo மற்றும் Radisson Blu Resort Galle ஆகியன சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான அபாயமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்தியதையே, இப்பெறுமதியான அந்தஸ்தை கைப்பற்றியுள்ளதன் ஊடாக உறுதியாகியுள்ளது.
இரண்டு ஹோட்டல்களும் Safe Hotels Alliance AB ஊடாக அபாயமின்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை கடுமையான மதிப்பீடுகள், தணிக்கைகள் மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளன. நெருக்கடி முகாமைத்துவம், தீ பாதுகாப்பு மற்றும் அவசர கால பதிலளிப்பு உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் உள்ளடங்கும்.
பிரீமியம் தரத்திலான சான்றிதழ் பெறுவது தொடர்பாக Radisson Blu Resort Galle பொது முகாமையாளர் மொன்டி ஆரியரத்ன கருத்து தெரிவிக்கையில் “இந்த குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இலங்கையில் முன்னோடியாக இருப்பது தொடர்பில் மகிழ்ச்சியாக உள்ளது.” எனக் குறிப்பிட்டார்.