இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், வாடிக்கையாளர் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பின் பிரகாரம், 2023 நிதியாண்டுக்காக 13.5% தொகையை காப்புறுதிதாரர் பங்கிலாபமாக பிரகடனம் செய்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்காக ஆரம்பத்தில் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்த பங்கிலாபப் பெறுமதியான 10% என்பதை விட, நிறுவனம் நிதிசார் உறுதித் தன்மை மற்றும் மீட்சி ஆகியவற்றை வெளிப்படுத்தி இயங்கி, 13.5% எனும் உயர் தொகையை பங்கிலாபமாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் உறுதியான செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு தமது பெறுமதியை அதிகரித்துக் கொள்வதற்கான நிலையை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “மிகச் சிறந்த பங்கிலாப வீதத்தை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், 2023 ஆம் ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையை கடந்துள்ளோம். எமது பங்காளர்களுக்கு உயர் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது அர்ப்பணிப்புக்கான தெளிவான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த தசாப்த காலப்பகுதியில் பிரகடனம் செய்யப்பட்ட அதியுயர் பங்கிலாப வீதமாக இது அமைந்துள்ளது. அதனூடாக, வெளியக சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், கடந்த காலங்களில் எமது தொடர்ச்சியான வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மேலும் இந்த குறிப்பிடத்தக்களவு பங்கிலாப செலுத்தல் என்பது, எமது வாடிக்கையாளர்களின் ஆயுள் நிதியத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்குவதுடன், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 64,510 மில்லயனாக உயர்ந்திருந்தது..” என்றார்.